RSS

இன்று சலீம் படம் பார்த்தேன்...






துவக்கத்தில் ஹதீஸ் அரபியில் ஓதுகிறது.
குற்றத்தை தட்டிக்கேட்கும் ஒரு நேர்மையான முஸ்லிம் டாக்டராக நடித்துள்ளார் சலீம் (விஜய் ஆண்டனி).

சலீமிடம் ஒரு போலிஸ் அதிகாரி கேட்கிறார் சலீம் நீ அல்கொய்தாவா?இந்திய முஜாஹிதா?சிமியா? என்று கேட்கிறார் அதற்கு சலீம் சொல்கிறார் சலீம் என்று பெயர்

வைத்தாலே தீவிரவாதியா? அப்படி என்றால் என்னை ஒரு விஜயாகவோ ஆண்டனியாகவோ இருந்தால் என்ன சொல்வீர்கள் என்று.

இதன் மூலம் முஸ்லிம் பெயர் வைத்தாலே தீவிரவாதியா?என்று அழகாக கேட்டுள்ளார் விஜய் ஆண்டனி..இதற்கு விஜய் ஆண்டனிக்கு பாராட்டுக்கள்.

ஆரம்பத்தில் அரபியில் ஓதும் ஹதீஸ் ( www.youtube.com/watch?v=mBaNtj0OrSk
) அல்லாஹ்வை நம்புவது 2. வானவர்களை நம்புவது 3. வேதங்களை நம்புவது 4. நபிமார்களை நம்புவது 5. மறுமையை நம்புவது 6. விதியை நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது …(ஹதீஸின் கருத்து)
உமர் (ரலி)
நூல்:புகாரி.

முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் ஊடகத்தில் முஸ்லிம்களை நன்மதிப்பில் காட்டியுள்ள விஜய் ஆண்டனியை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.

நடிகர் விஜய் ஆரம்பில் சந்திரலேகா படத்தில் அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் என்று பாடல் படித்தார்,நடித்தார்.
ஆனால் அவரை நாம் தொடர்பு கொள்ளாமல் இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்து சொல்லாமல் அவரை நெருங்கும் வேலைகளை பார்க்கவில்லை.அவரை நாம் நட்பு வட்டத்திற்குள் கொண்டு வந்திருந்தாள் ஒரு துப்பாக்கி வந்திருக்காது இதைவிட்டு அவர் ஒரு கூத்தாடி என்று ஒதுங்கினோம் காலப்போக்கில் துப்பாக்கி படத்தில் அவர் நமக்கு பிடிக்காத காட்சிகளில் நடித்தார்.

பாபர் பள்ளிவாசல் இடித்தபோது முதலில் முஸ்லிம் அல்லாத ஒருவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்தவரும்,அன்றைய பிரதமர் நரசிமராவை சந்தித்து பாபர் பள்ளிவாசல் இருந்த இடத்தில் கட்டித்தாருங்கள் என்று சொன்னவரும் கமல் ஹாசன்.முஸ்லிம்களோடு அன்று அவர் நின்றார் .அவரை அன்று நாம் சந்தித்து உண்மை தன்மைகளை சொல்லி இருக்கவேண்டும் அவரை நாம் நட்பு வட்டத்திற்குள் கொண்டு வந்து இருக்கவேண்டும் .அவரை நாம் தொடர்பு கொள்ளாமல் இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்து சொல்லாமல் அவரை நெருங்கும் வேலைகளை பார்க்காமல் அவர் ஒரு கூத்தாடி என்று ஒதுங்கினோம் காலப்போக்கில் உன்னைப்போல் ஒருவன்,விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான உலக அரசியல் சினிமாவை எடுத்தார்.

அதைப்போல விஜய் ஆண்டனி ஒரு கூத்தாடி என்று அன்று செய்த அதே தவறை செய்யாமல் விஜய் ஆண்டனி அவர்களை அனைவரும் பாராட்டவேண்டும்.அவரை தொடர்புப்படுத்தி உண்மை தன்மைகளை சொல்லவேண்டும்.அவருடன் நாம் நட்பு வட்டத்தை அதிகப்படுத்தவேண்டும்.
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்று சொல்வார்கள் அதைவிட்டு
வருமுன் காப்பது சிறந்தது என்று ஒரு பழமொழி உண்டு அதன்படி செல்வோம்.